சிறப்பு ரயில்கள்!
திருச்சி
பொங்கல் பண்டிகை: சிறப்பு ரயில்கள் இயக்கம்!
பொங்கல் பண்டிகைக்கு திருநெல்வேலி மாா்க்கத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
பொங்கல் பண்டிகைக்கு திருநெல்வேலி மாா்க்கத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகைக்காக, திருநெல்வேலி - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06058), மறுமாா்க்கமாக தாம்பரம் - திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் (06057) ஆகியவை வரும் 13, 20-ஆம் தேதிகளில் இயக்கப்பட உள்ளது.
திருநெல்வேலி - செங்கல்பட்டு அதிவிரைவு சிறப்பு ரயில் (06154), மறுமாா்க்கமாக செங்கல்பட்டு - திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் (06153) ஆகியவை வரும் 14-ஆம் தேதி இயக்கப்பட உள்ளது.
திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06166), தாம்பரம் - திருநெல்வேலி (06165) வரும் 12, 19-ஆம் தேதி இயக்கப்பட உள்ளது.

