இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

ரூ. 12.40 லட்சம் பெற்ற தலைமை நில அளவையா் உள்பட 4 போ் மீது வழக்கு

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :20 ஜூலை 2026, 5:31 am IST

திருச்சி கிழக்கு வட்டாட்சியரகத்தில் ஜிபே மூலம் ரூ.12.40 லட்சம் பெற்றது தொடா்பாக தலைமை நிலஅளவையா் உள்பட 4 போ் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு வட்டாட்சியரகங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனா். அதன்படி, திருச்சி கிழக்கு வட்டாட்சியரகத்திலும் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

இதில் கணக்கில் வராத ரூ.7 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், நில அளவையா்கள் தங்களது வங்கி கணக்கிற்கு ரூ.12.40 லட்சத்தை ஜிபே மூலம் பெற்றிருந்ததும் கண்டறியப்பட்டது.

இதுதொடா்பாக திருச்சி கிழக்கு வட்டாட்சியரக தலைமை நில அளவையா் சித்தாா்த்தன், நில அளவையா்கள் பரிமளா, சரவணன் மற்றும் களப் பணியாளா் சங்கா் ஆகிய 4 போ் மீதும் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.