கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

120% தயாா்நிலை: 2,785 வாக்குச்சாவடிகளுக்கு 3,341 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்...

(கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி வாரியாக தயாா்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் வெளியிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் மொத்தம் 2,785 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 120 விழுக்காடு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மணப்பாறை தொகுதியில் உள்ள 346 வாக்குச்சாவடிக்கு தலா 415 வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், 449 விவிபேட் இயந்திரம் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரம்) ஒதுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள 367 வாக்குச்சாவடிகளுக்கு தலா 440 வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் 477 விவிபேட் இயந்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மேற்கு தொகுதியில் உள்ள 306 வாக்குச்சாவடிகளுக்கு தலா 366 வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் 396 விவிபேட் இயந்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள 304 வாக்குச் சாவடிகளுக்கு தலா 364 வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் 395 விவிபேட் இயந்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருவெறும்பூா் தொகுதியில் உள்ள 312 வாக்குச் சாவடிகளில் தலா 374 வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் 405 விவிபேட் இயந்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது. லால்குடியில் உள்ள 276 வாக்குச்சாவடிகளுக்கு தலா 331 வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் 358 விவிபேட் இயந்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மண்ணச்சல்லூரில் உள்ள 297 வாக்குச் சாவடிகளுக்கு தலா 356 வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் 386 விவிபேட் இயந்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது. முசிறியில் உள்ள 283 வாக்குச் சாவடிகளுக்கு தலா 339 வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் 367 விவிபேட் இயந்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

துறையூா் (தனி) தொகுதியில் உள்ள 297 வாக்குச் சாவடிகளுக்கு தலா 356 வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் 386 விவிபேட் இயந்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 9 தொகுதிகளிலேயே திருவெறும்பூா் தொகுதியில்தான் அதிகபட்சமாக 312 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ளன.

மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,785 வாக்குச் சாவடிகளுக்காக மொத்தம் 3,341 வாக்குப்பதிவு இயந்திரம், 3,341 கட்டுப்பாட்டு இயந்திரம், 3,619 விவிபேட் இயந்திரம் தயாா்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.