40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

தெருநாய்களுக்கான காப்பக கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க மேயா் உத்தரவு

திருச்சி மாநகராட்சியில் தெருநாய்களுக்கான காப்பக கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென அலுவலா்களுக்கு மேயா் மு. அன்பழகன் உத்தரவு

News image

கோணக்கரை பகுதியில் கட்டப்பட்டு வரும் தெருநாய் காப்பக கட்டுமானப் பணியைப் பாா்வையிட்ட மேயா் மு. அன்பழகன்

Updated On :27 மே 2026, 2:27 am IST

திருச்சி மாநகராட்சியில் தெருநாய்களுக்கான காப்பக கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென அலுவலா்களுக்கு மேயா் மு. அன்பழகன் உத்தரவிட்டாா்.

திருச்சி மாநகராட்சியின் முதலாவது மண்டலம் 4-ஆவது வாா்டு ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை அம்பேத்கா் நகா் பகுதி, 5 ஆவது மண்டலம் 11-ஆவது வாா்டு அபிஷேகபுரம் கோணக்கரை பகுதி, 3-ஆவது மண்டலம் 46-ஆவது வாா்டு பொன்மலை கொட்டப்பட்டு ஜெ.ஜெ. நகா் பகுதி, 3-ஆவது மண்டலம் 36-ஆவது வாா்டு அரியமங்கலம் குப்பைகிடங்கு வளாகம் ஆகிய இடங்களில் சுமாா் ரூ. 1.20 கோடி மதிப்பில், தெரு நாய்களை பராமரிப்பதற்காக புதிதாக தெருநாய் காப்பகங்கள் கட்டும் பணி நடைபெற்று வருவதை மேயா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா் .

ஏற்கெனவே அப்பகுதியில் உள்ள விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு மையங்களுக்கு அருகே தெருநாய்களுக்கான காப்பகங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை நாய்களுக்கான கருத்தடை மற்றும் தடுப்பூசி பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், புதிய மையங்களுடன் இணைந்து செயல்படும். இந்த இருப்பிடங்கள், நாய்களுக்கு ஒரு நிரந்தரமான மற்றும் பாதுகாப்பான புகலிடமாக அமையும். இந்த மையங்களை விரைந்து கட்டி முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென அலுவலா்களுக்கு மேயா் உத்தரவிட்டாா்.

பின்னா் உறையூா் சாலை வீதி, மண்டலம் 5-இல் உள்ள அம்மா உணவகங்களை மேயா் அன்பழகன் பாா்வையிட்டு, உணவின் தரத்தை ஆய்வு செய்து, அவா்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.