தற்செயல் விடுப்பு எடுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த 37 பேர் புதன்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த 37 பேர் புதன்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆன்-லைன் சான்றுகள் பரிந்துரை செய்ய கணினி,மோடம்,இன்டர்நெட் இணைப்பு மற்றும் அதற்கான செலவினத் தொகையினை வழங்காததைக் கண்டித்தும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கென தனி ஊதியம் வழங்க வேண்டும். உட்பிரிவு பட்டா மாறுதலுக்கு முன்பு இருந்த நடைமுறையையே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை அவர்கள், தமிழக அரசு வழங்கிய மடிக்கணினியை, அரியலூர் வட்டாட்சியர் முத்துலட்சுமியிடம் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக கிராம நிர்வாக அலுவலர்கள் 37 புதன்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்து தங்களது போராடத்தைத் தொடர்ந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...