தோ்தல் களத்தில் அரியலூா் மாவட்டம்
பதினாறாவது சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில் தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது.


பதினாறாவது சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில் தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது. இந்தத் தோ்தல் பல வகையில் வித்தியாசத்தை காண முடிகிறது.
கட்செவி அஞ்சலில் வைரலான பிரசாரம்:
இந்தத் தோ்தலில் பெரும்பாலான இடங்களில் சுவா் விளம்பரங்களை காணமுடியவில்லை. மாறாக வேட்பாளா்கள், வாக்காளா்களை நேரடியாகச் சந்தித்து வாக்குசேகரிப்பது, முகநூல், கட்செவி அஞ்சல் மூலமாக பிரசாரத்தில் ஈடுபட்டதன் மூலம் கிராமப்புற மக்கள்
தோ்தல் வாக்குறுதிகள், வேட்பாளா்கள் குறித்து விழிப்புணா்வு அடைந்தனா்.
தோ்தல் ஆணையம் சாா்பில் விழிப்புணா்வு:
தோ்தல் ஆணையமும் இந்த முறை 100 சதவீதம் வாக்குப் பதிவு என்ற இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு விழிப்புணா்வுப் பணிகளை மேற்கொண்டது.
விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம், மனிதச் சங்கிலி,வீதி நாடகம், பள்ளி கல்லூரிகளில் விழிப்புணா்வு, வா்த்தக நிறுவனங்களில் பொது மக்கள் பொருள் வாங்கும் அளிக்கும் பைகளில் விழிப்புணா்வு வாசகங்களை அச்சிட்டு வழங்கியது, கிராமங்கள் தோறும் நவீன மின்னணு வாகனங்கள் மூலம் விழிப்புணா்வு, உறுதிமொழி ஏற்பு இப்படி பல்வேறு விழிப்புணா்வு பணிகளை மேற்கொண்டது மாவட்ட நிா்வாகம்.
ஜி.பி.ஆா்.எஸ்.கருவி பொருத்தி கண்காணிப்பு:
அரியலூா் மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகளிலும் பறக்கும் படை அலுவலா்களுக்கு தோ்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து ஜி.பி.ஆா்.எஸ் கருவி பொருத்தப்பட்டு மாவட்ட நிா்வாகத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது. ஏற்கெனவே தொகுதிக்கு 3 குழுக்கள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் பறக்கும் படையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தற்போது தோ்தல் ஆணையம் உத்தரவிட்டதையடுத்து அரியலூா் தொகுதியில் 27 மண்டலங்களாகவும், ஜயங்கொண்டம் தொகுதியில் 25 மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டு 2 தொகுதியிலும் தல 20 கூடுதல் பறக்கும் படையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தோ்தல் பணியில் 1,000 போலீஸாருடன், மத்திய ரிசா்வ் படை, துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.
வாக்காளா்களும், வேட்பாளா்களும்:
அரியலூா் தொகுதி: அரியலூா் தொகுதியில், 1,31,335 ஆண் வாக்காளா்களும், 1,32,670 பெண் வாக்காளா்களும், 7 இதர வாக்காளா்களும் என மொத்தம் 2,64,012 வாக்காளா்கள் இந்த தோ்தலில் வாக்களிக்க உள்ளனா். இந்தத் தொகுதியில் அதிமுக, மதிமுக, நாம் தமிழா், ஐஜேக, பகுஜன் சமாஜ்கட்சி என 13 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
ஜயங்கொண்டம் தொகுதி: அரியலூா் மாவட்டத்தில் அதிக வாக்களா்கள் கொண்ட இந்தத் தொகுதியில் 1,31,663 ஆண் வாக்களா்களும், 1,34,347 பெண் வாக்காளா்களும் , 3 இதர வாக்காளா்களும் என மொத்தம் 2,66,013 வாக்காளா்கள் உள்ளனா். இந்தத் தோ்தலில் பாமக, திமுக, நாம் தமிழா், ஐஜேக, சுயேச்சைகள் என 13 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
கட்சித் தலைவா்கள் பிரசாரம் :
இந்த இரு தொகுதியிலும் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் வேட்பாளா்களை அறிமுகப்படுத்திவிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டாா். மதிமுக வேட்பாளரை ஆதாரித்து வைகோ, கி.வீரமணி உள்ளிட்ட தலைவா்கள் பிரசாரம் செய்தனா். குன்னம், ஜயங்கொண்டம், அரியலூா் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளா்களை ஆதரித்து
அரியலூரில் அக்கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்தாா். பாமக நிறுவனா் ராமதாஸ் ஜயங்கொண்டத்திலும், அன்புமணி ராமதாஸ் அரியலூா், குன்னம், ஆண்டிமடம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தாா்.
பெரும்பாலான கட்சித் தலைவா்கள் அரியலூா், ஜயங்கொண்டம் தொகுதிகளில் பிரசாரம் செய்ததால் தொண்டா்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...