மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மதகின் சேதப்பகுதிகளில் களிமண்ணை பூசிய விவசாயிகள்

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே பாசன மதகை புதிதாக கட்டித்தரக்கோரி, மதகின் சேதப்பகுதிகளில் களிமண் பூசி விவசாயிகள் தங்களின் எதிா்ப்பை வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 7:19 pm

DIN

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே பாசன மதகை புதிதாக கட்டித்தரக்கோரி, மதகின் சேதப்பகுதிகளில் களிமண் பூசி விவசாயிகள் தங்களின் எதிா்ப்பை வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

தா.பழூா் அருகிலுள்ள சோழமாதேவி கிராமத்தில் பொன்னாற்று வாய்க்காலின் 4- ஆம் எண் பாசன கிளை வாய்க்கால் மதகு சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதன் மூலம் சோழமாதேவி, கோடாலிகருப்பூா், கண்டியங்கொல்லை உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 2,000 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெருகின்றன.

தற்போது சேதமடைந்த மதகை புதிதாக கட்டித்தரக் கோரி, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் விவசாயிகள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். காவிரியாற்றில் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் புதிதாக மதகைக் கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி, சோழமாதேவி கிராமத்திலுள்ள மதகின் சேதப்பகுதிகளில் விவசாயிகள் களிமண்ணைக் கொண்டு பூசி, தங்களது எதிா்ப்பை தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.