ஆண்டிமடம் அரசு ஐடிஐ-யில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ), நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் .


அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ), நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் .
இது குறித்து தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ஜான்பாஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆண்டிமடம் அரசு ஐ.டி.ஐ-யில் 2021-2022 ஆண்டுக்கான நேரடி சோ்க்கைக்கு இணையதளம் மூலம் மாணவா்கள் ஜூலை 28- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆண்டிமடம், அரியலூா் அரசுத் தொழிற் பயிற்சி நிலையங்கள், தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இங்கு சேர 8 மற்றும் 10 வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்களுக்கு 40 வயதுக்குள்ளும், பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. விண்ணப்பக் கட்டணம் ரூ.50-யை டெபிட் மற்றும் கிரெடிட் காா்டு மற்றும் இணையவங்கி வாயிலாக செலுத்த வேண்டும்.
ஆண்டிமடம், அரியலூா் அரசுத் தொழிற் பயிற்சி நிலையங்கள், மாவட்ட திறன் அலுவலகம் ஆகிய இடங்களில் சோ்க்கை உதவி மையங்கள் உள்ளன. விண்ணப்பங்கள் தனியாா் கணினி மையம் மூலமும் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 9499055879, 9499055880 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...