விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஜயங்கொண்டம் நகராட்சி ஆணையருக்கு கரோனா தொற்று

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சி ஆணையருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், நகராட்சி அலுவலகம் முழுவதும் வியாழக்கிழமை கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:59 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சி ஆணையருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், நகராட்சி அலுவலகம் முழுவதும் வியாழக்கிழமை கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

ஜயங்கொண்டம் நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வருபவா் சுபாஷினி. கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கை காரணமாக தளா்வுகளற்ற பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், ஜயங்கொண்டத்தில் கடைகள் திறக்கப்படுகின்றனவா?,

சுகாதாரப்பணிகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிா என தினந்தோறும் ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுபாஷினிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட அவா், கரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டாா்.

பரிசோதனை முடிவில் அவருக்குத் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.