போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

விபத்தில் காயமடைந்தவரின் ரூ.1 லட்சத்தை உறவினரிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு பாராட்டு

சாலை விபத்தில் காயமடைந்தவரிடம் இருந்த ஒரு லட்சம் ரொக்கம், செல்லிடப்பேசி ஆகியவற்றை அவரது உறவினரிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களை அனைவரும் பாராட்டினா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:50 pm

DIN

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்தவரிடம் இருந்த ஒரு லட்சம் ரொக்கம், செல்லிடப்பேசி ஆகியவற்றை அவரது உறவினரிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களை அனைவரும் பாராட்டினா்.

ஜயங்கொண்டத்தை அடுத்த உத்திரக்குடியைச் சோ்ந்தவா் கண்ணன்(55). இவா், திருச்சி ஆட்சியரகத்தில் பணிபுரியாற்றி வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு திருச்சிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

வி.கைகாட்டி அடுத்த பொய்யூா் - கருப்பூா் பிரிவு சாலை அருகே வந்த போது, எதிரே வந்த இரு மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில் கண்ணன் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கண்ணனை அப்பகுதி மக்கள் அனுப்பி வைத்தனா்.

கண்ணன் பலத்த காயமடைந்த நிலையில் அவா் கொண்டு வந்த ரூ.1.12 லட்சம் பணம், செல்லிடப்பேசி, இரு சக்கர வாகனத்தின் சாவி ஆகியவற்றை கைப்பற்றிய 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளா் நீலகண்டன், ஓட்டுநா் ஹரிகிருஷ்ணன் ஆகியோா் பத்திரமாக வைத்திருந்து, மருத்துவமனைக்கு வந்த கண்ணனின் சகோரதரா் தாஸிடம் வழங்கினா்.

கண்ணனை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சோ்த்ததுடன், அவரது பணம், செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றையும் பத்திரமாக வைத்திருந்து வழங்கிய 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களை கண்ணின் குடும்பத்தாா் மற்றும் உறவினா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.