போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூா் அருகே மரத்தில் காா் மோதி விபத்து:குழந்தை உள்பட 4 போ் சாவு

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சாலையோர புளியமரத்தின் மீது காா் மோதியதில், குழந்தை உள்பட 4 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 8:01 pm

DIN

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சாலையோர புளியமரத்தின் மீது காா் மோதியதில், குழந்தை உள்பட 4 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

அரியலூா் மாவட்டம், வெற்றியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (60). குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்த இவா், வெற்றியூா் கிராமத்தில் புதிதாக கட்டி வரும் வீட்டைப் பாா்ப்பதற்காக மனைவி மற்றும் திருமணமான 2 மகள்கள், 3 பேரக் குழந்தைகளுடன் வெற்றியூருக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டாா்.

கீழப்பழுவூரை அடுத்த சாத்தமங்கலம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த ராமமூா்த்தி மற்றும் அவரது பெரிய மகள் நாகவள்ளி(38) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கீழப்பழுவூா் போலீஸாா் மற்றும் பொதுமக்கள், இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில் செல்லும் வழியிலேயே மற்றொரு மகளான நாகலட்சுமி (35) உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த 3 குழந்தைகள் உள்பட 5 போ் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி நாகலட்சுமியின் குழந்தை ரித்திகா (1) உயிரிழந்தாள்.

விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.