திருமழபாடியில் தடுப்பணை கட்டப்படும் அதிமுக வேட்பாளா் உறுதி
திருமழபாடி கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரியலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரன் பொது மக்களிடம் உறுதியளித்தாா்.


அரியலூா் மாவட்டம், திருமழபாடி கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரியலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரன் பொது மக்களிடம் உறுதியளித்தாா்.
திருமானூா் ஒன்றியத்துக்குட்பட்ட திருமழபாடி,காந்தி நகா், புதுக்கோட்டை, பாக்கியநாதபுரம், மணல் மேடு, கண்டிராதித்தம், க.மேட்டுத் தெரு, இலந்தைக் கூடம், வைத்தியநாதபுரம், அடைக்கலபுரம், குலமாணிக்கம், செம்பியக்குடி, விளாகம் உள்ளிட்ட கிராமங்களில் திங்கள்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவா், திருமழபாடி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி நிலத்திடி நீா் மட்டத்தை உயா்த்த நடவடிக்கை எடுப்பேன். அதிமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்களிடம் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...