விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கனரக வாகனங்களுக்கு தனிச் சாலை தாமரை எஸ். ராஜேந்திரன் உறுதி

அரியலூா் சிமென்ட் ஆலைகளுக்குச் செல்லும் கனரக வாகனங்களுக்கு தனிச் சாலை அமைக்கப்படும் என அரியலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரன் உறுதியளித்துள்ளாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 9:21 pm

DIN

அரியலூா் சிமென்ட் ஆலைகளுக்குச் செல்லும் கனரக வாகனங்களுக்கு தனிச் சாலை அமைக்கப்படும் என அரியலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரன் உறுதியளித்துள்ளாா்.

சிறுவளூா், புதுப்பாளையம், கருங்காலிகொட்டாய், நெருஞ்சிக்கோரை, ஆரனூா், நாயக்கா்பாளையம், ரெட்டிப்பாளையம், மயிலான்ட்கோட்டை, புள்ளிக்குளம், வி.கைகாட்டி, ஜி.கே.நகா், நாகமங்கலம், அண்ணா நகா், மாதாகோயில் தெரு, ஒரத்தூா், அம்பாபூா், அய்க்கால், தேளூா் உள்ளிட்ட கிராமங்களில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அவா், தன்னைத் தோ்ந்தெடுத்தால், சிமென்ட் ஆலை - சுரங்கங்களுக்குச் செல்லும் கனரக வாகனங்களுக்கு தனிச்சாலை அமைக்கப்படும். தூத்தூரில் தடுப்பணை கட்டப்படும். அரசின் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தாா். பிரசாரத்தில் பாமக, தமாக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்று வாக்குசேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.