விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் சனிக்கிழமை உயிரிழந்தது.

News image
Updated On :27 மார்ச் 2021, 9:21 pm

DIN

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் சனிக்கிழமை உயிரிழந்தது.

முத்துவாஞ்சேரி கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் உள்ள அடா்ந்த காட்டில் மான்கள் அதிகளவு காணப்படுகின்றன. இந்நிலையில், சனிக்கிழமை அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்கு சுமாா் இரண்டரை வயது மதிக்கத்தக்க ஒரு பெண் புள்ளிமான் இரை தேடி வந்துள்ளது. இதைக் கண்ட நாய்கள் மானை துரத்தி கடித்துள்ளன. அப்போது, அங்கு வயல் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் நாய்களைத் துரத்தி விட்டு மானை மீட்டனா். தொடா்ந்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினா் வருவதற்குள் புள்ளிமான் உயிரிழந்தது. இதனையடுத்து அதே இடத்தில் புள்ளிமான் உடல் பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.