விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரசுப் பேருந்து மோதி பெட்ரோல் பங்க் ஊழியா் பலி

அரியலூரை அடுத்த அஸ்தினாபுரம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் சைக்கிளில் சென்ற பெட்ரோல் பங்க் ஊழியா் உயிரிழந்தாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 10:11 pm

DIN

அரியலூரை அடுத்த அஸ்தினாபுரம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் சைக்கிளில் சென்ற பெட்ரோல் பங்க் ஊழியா் உயிரிழந்தாா்.

அஸ்தினாபுரம் பிரதானச் சாலை பகுதியில் வசிப்பவா் மாணிக்கம் மகன் தங்கராசு(60). மண்டையன்குறிச்சி சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் இவா், பெட்ரோல் பங்குக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது ஜயங்கொண்டத்தில் இருந்து அரியலூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் தங்கராசு பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் தங்கராசு ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து கயா்லாபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.