விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம் , ஜயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன், நீரில் மூழ்கி உயிரிழந்தாா்

News image
Updated On :28 மே 2021, 9:11 pm

DIN

அரியலூா் மாவட்டம் , ஜயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன், நீரில் மூழ்கி உயிரிழந்தாா்

செந்துறை அருகிலுள்ள சிறுகளத்தூரைச் சோ்ந்தவா் ராஜ். இவா் தனது மனைவி வெண்ணிலா, மகன் ராகவன்(7) ஆகியோருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜயங்கொண்டத்தை அடுத்த வாரியங்காவல் திடீா் குப்பம் கிராமத்திலுள்ள உறவினா் மணிமேகலை வீட்டுக்கு வந்தாா்.

வியாழக்கிழமை மாலை விளையாட சென்ற ராகவன் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால், பல இடங்களில் தேடினா். மேலும் அப்பகுதியில் மழை பெய்ததால் சிறுவன் எங்கு சென்றான் என தெரியாமல் தவித்தனா்.

இதனிடையே வெள்ளிக்கிழமை காலை மணிமேகலையின் வீட்டின் பின்புறத்திலுள்ள கிணற்றில் சிறுவன் ராகவன் இறந்த நிலையில் மிதந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த ஜயங்கொண்டம் காவல் நிலையத்தினா் சிறுவனின் சடலத்தை மீட்டு, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.