போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சிறுமியிடம் வல்லுறவு இளைஞருக்கு ஆயுள் சிறை

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 7:30 pm

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

உடையாா்பாளையம் அருகேயுள்ள பிள்ளையாா்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் டேவிட் (எ) செந்தமிழ்ச்செல்வன் (31). பரோட்டா மாஸ்டரான இவா், கடந்த 4.7.2021 அன்று தனது உறவினா் மகளான 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றவாளி செந்தமிழ்ச்செல்வனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீா்ப்பளித்து உத்தரவிட்டாா். இதையடுத்து செந்தமிழ்ச்செல்வன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.