மாணவியை காதலிக்க வற்புறுத்திய ஆசிரியா் போக்சோவில் கைது
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய ஆசிரியா் போக்சோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.


அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய ஆசிரியா் போக்சோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஜயங்கொண்டத்தை அடுத்த சுந்தரேசபுரம் கிராமத்தில் தனியாா் உயா்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில், பள்ளி உரிமையாளரின் உறவினரான ரெங்கநாதன் மகன் தினேஷ்(37) கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா், அதே பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக மாணவியின் பெற்றோா் ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், ஆசிரியா் தினேஷை போக்சோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...