விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூா் மாவட்டத்தில் பாமகவினா் மறியல்

நெய்வேலி போராட்டத்தில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அரியலூா், ஜெயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியலில்

News image
Updated On :28 ஜூலை 2023, 7:11 pm

DIN

நெய்வேலி போராட்டத்தில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அரியலூா், ஜெயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட பாமகவினா் 53 போ் கைது செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்காக அப்பகுதி விவசாய நிலங்கள் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா். அப்போது ஏற்பட்ட வன்முறையையடுத்து அன்புமணி உள்ளிட்டோரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இதைக் கண்டித்தும், அன்புமணியை விடுதலை செய்யக் கோரியும் அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் நான்குச் சாலை சந்திப்பில் அக்கட்சியின் நகர செயலா் பரசுராமன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற காவல் துறையினா் மறியலில் ஈடுபட்ட 13 பேரை கைது செய்தனா்.

இதேபோல அரியலூரில் செந்துறை ரவுண்டானாவில் நகரச் செயலா் விஜி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 11 பேரும், அரியலூா் அண்ணாசிலை அருகே 9 பேரும், செந்துறையில் 20 பேரும் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.