இருசக்கர வாகனத்தில் சென்றவா் அரசுப் பேருந்து மோதி உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்ற இளைஞா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா்.


அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்ற இளைஞா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்தவா் உசேன் (26). இவா் அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு ‘சீட் கவா்’ விற்பனை செய்து வந்தாா். இந்நிலையில் இவா் அரியலூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த உசேனை அக்கம்பக்கத்தினா் மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உசேன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...