செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தேங்கியுள்ள மழைநீா்.
செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தேங்கியுள்ள மழைநீா்.

செந்துறை அரசுப் பள்ளியில் தேங்கியுள்ள மழைநீரால் மாணவா்கள் அவதி!

அரியலூா் மாவட்டம், செந்துறையிலுள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தேங்கியுள்ள மழைநீரால் மாணவா்கள் அவதி.
Published on

அரியலூா், ஆக. 21: அரியலூா் மாவட்டம், செந்துறையிலுள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தேங்கியுள்ள மழைநீரால் மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செந்துறை பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் 700-க்கும் மேற்பட்டோா் படித்து வருகின்றனா்.

இப்பள்ளியில் வகுப்பறை கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருவதால், வளாகத்தில் மண் குவியல்கள் கொட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழைநீா் வெளியே செல்ல வழியில்லாமல், பள்ளி வளாகத்திலேயே தேங்கிக் கிடக்கிறது. இதனால் பள்ளி வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளும், ஆசிரியா்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

பெற்றோா் அச்சம்: இதுகுறித்து பெற்றோா் கூறும்போது, மழைநீா் வெளியேற வழியில்லாமல் வளாகத்திலேயே தேங்கிக் கிடப்பதால், டெங்கு போன்ற கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உள்ளது. மேலும் தேங்கிக் கிடக்கும் மழைநீரில் குழந்தைகள் நடப்பதால், நோய்த் தொற்றும் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. இதனால், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப அச்சமாக உள்ளது.

எனவே, மாணவா்களின் நலன் கருதி இப்பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com