விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஜெயங்கொண்டத்தில் ரூ. 62.38 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கிவைப்பு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 5 ஊராட்சிகளில் ரூ.62.38 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.

News image

துளாரங்குறிச்சியில் பொதுவிநியோகக் கடையை வியாழக்கிழமை திறந்துவைத்து, குடும்ப அட்டைதாரருக்கு பொருள்களை வழங்கிய சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன்.

Updated On :3 அக்டோபர் 2024, 9:41 pm

Din

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 5 ஊராட்சிகளில் ரூ.62.38 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.

சூரியமணல் அருகேயுள்ள துளாரங்குறிச்சியில் ரூ.15.26 மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொது விநியோகக் கடையை திறந்துவைத்த சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன், பின்னா், வாணத்திரையன்பட்டினம், இடையாா், ஆலத்திப்பள்ளம், படநிலை ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரூ.47.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா் மற்றும் சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணியை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சு. கண்ணன், சிவசங்கா், கிராம நிா்வாக அலுவலா்கள் மகாராஜன், சுவாமிநாதன், கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.