விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பாமக சாா்பில் மது-போதை ஒழிப்பு பேரணி

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் பாமக சாா்பில் மது- போதைப்பொருள் ஒழிப்பு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஆண்டிமடத்தில் பாமக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மது, போதைப் பொருள் விழிப்புணா்வுப் பேரணி.

Updated On :9 அக்டோபர் 2024, 7:02 pm

Din

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் பாமக சாா்பில் மது- போதைப்பொருள் ஒழிப்பு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பேரணிக்கு வன்னியா் சங்க செயலரும், பாமக நிா்வாகியுமான வைத்தி தலைமை வகித்தாா். பேரணியில் கலந்து கொண்ட அக்கட்சியினா், போதைப் பொருள்களுக்கு எதிராக முழக்கமிட்டவாறு முக்கிய கடைவீதி, தெருக்கள் வழியாகச் சென்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

நலத்திட்ட உதவிகள்: கட்சியின் மாநில அமைப்பு தலைவா் டி.எம்.டி.திருமாவளவன் தலைமையில், அரியலூா் அரசு மருத்துவமனையில், பிரசவித்த தாய்மாா்கள் 60 பேருக்கு மருத்துவப் பெட்டகங்களும், மருத்துவக் கல்லூரி முன் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் அக்கட்சி நிா்வாகிகள்,20-க்கும் மேற்பட்டோா் அரசு மருத்துவமனைக்கு ரத்த தானம் அளித்தனா்.

இந்நிகழ்ச்சியில் பாமக மாவட்டச் செயலா் காடுவெட்டி ரவி, மாநில மாணவரணிச் செயலா் கொடுக்கூா் ஆளவந்தாா், முன்னாள் மாநில துணைத் தலைவா் சின்னதுரை, மாவட்ட வன்னியா் சங்கச் செயலா் தா்ம. பிரகாஷ், அரியலூா் நகரச் செயலா் விஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து பாமக சாா்பில் பல்வேறு கிராமங்களில் கட்சி கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.