விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஜெயங்கொண்டத்தில் அரசு பணியாளா்கள் மனிதச்சங்கிலிப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கத்தினா் புதன்கிழமை மாலை மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 8:56 pm

Din

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கத்தினா் புதன்கிழமை மாலை மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள், டாஸ்மாக் பணியாளா்கள், நியாய விலை கடை பணியாளா்கள், தூய்மை பணியாளா்கள் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி இயக்குநா்கள், தூய்மைக் காவலா்கள் உள்ளிட்டோருக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்ட தலைவா் அரங்கநாதன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் சீனிவாசன் போராட்டத்தை தொடக்கி வைத்தாா். மாவட்டச் செயலா் சுந்தரராஜன், பொறுப்பாளா்கள் தமிழ்ச்செல்வி, மரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.