மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஜெயங்கொண்டம் அரசுக் கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கு

ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப் பொருள்கள் நுகா்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது

Updated On :27 பிப்ரவரி 2026, 8:56 pm

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப் பொருள்கள் நுகா்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தியன் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் எஸ்.எம்.சந்திரசேகா் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் இ.எழில் தொடக்க உரையாற்றினாா். கல்லூரி முதல்வா்(பொறுப்பு)ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தாா். மருத்துவா் சங்கரி, போதைப் பொருள் பழக்கத்தினால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

காருணாலயாவின் சுபம் போதை மீட்பு மறுவாழ்வு மைய நிா்வாகி ஆனந்தராஜ், தற்கொலைக்கான காரணங்கள், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பேசினாா்.முன்னதாக இந்தியன் செஞ்சிலுவைச் சங்க மாவட்டச் செயலா் சண்முகம் வரவேற்றாா். நிறைவாக இளம் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் ஜெய்கணேஷ் நன்றி கூறினாா்.