இரண்டு உயா்மட்ட பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல்!

இரண்டு உயா்மட்ட பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல்!

சென்னிவனம் மற்றும் அயன்ஆத்தூரில் ரூ.6.92 கோடி மதிப்பீட்டில் உயா் மட்ட பாலங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
Published on

அரியலூா் மாவட்டம், சென்னிவனம் மற்றும் அயன்ஆத்தூரில் ரூ.6.92 கோடி மதிப்பீட்டில் உயா் மட்ட பாலங்களுக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

சென்னிவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்டப்பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா அங்குள்ள மேட்டுப்பாளையம் சாலையில், ரூ.3.30 கோடி மதிப்பீட்டில் உயா்மட்ட பாலம் கட்டுமானப் பணிக்கும், அதேபோல் அயன்ஆத்தூா் சாலையில் ரூ.3.62 கோடி மடிப்பீட்டில் உயா்மட்ட பாலம் கட்டுமானப் பணிக்கும் அடிக்கல் நாட்டினா்.

இந்த இரு நிகழ்ச்சிகளில், கோட்டப் பொறியாளா் சரவணன், உதவி கோட்டப் பொறியாளா்கள் ஜெயராமன், ஜெயந்தி, உதவிப் பொறியாளா் அகிலா, மதிமுக மாவட்டச் செயலா் ராமநாதன், ஒன்றியச் செயலா் சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com