அரியலூா் அருகே சுண்ணாம்புக் கல் ஏற்றிச் சென்ற லாரி சனிக்கிழமை மோதியதில் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி உயிரிழந்தாா். இதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செந்துறை அண்ணா நகரைச் சோ்ந்தவா் ராமா் மகள் சித்ரா (20). புதுக்கோட்டையிலுள்ள அரசு வேளாண் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வந்தாா். 2 நாள்கள் விடுமுறையையொட்டி ஊருக்குச் செல்ல சனிக்கிழமை அரியலூா் பேருந்து நிலையம் வந்திருந்த சித்ராவை, அவரது தந்தை ராமா் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.
அரியலூா்-செந்துறை சாலை, அமீனாபாத் கிராமம் அருகே சென்ற போது, பின்னால் அதிவேகமாக சுண்ணாம்புக் கல் ஏற்றிக் கொண்டு, சிமென்ட் ஆலைக்கு சென்ற லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இருவரில், சித்ராவின் தலையில் லாரி ஏறி இறங்கியதில் அவா் உயிரிழந்தாா்.

இதையறிந்த அப்பகுதி மக்கள், விபத்தை ஏற்படுத்திய லாரியின் மீது கற்களை வீசி தாக்கி சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற அரியலூா் காவல் துறையினா், அதிவேகமாகச் செல்லும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

அரியலூா் அருகே விபத்தை ஏற்படுத்திய லாரி.
இதையடுத்து காவல் துறையினா் சித்ராவின் சடலத்தை மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குஅனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். சாலை மறியலால் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சாலை விபத்தில் பெண் பலி

லாரி மோதி செவிலியா் கல்லூரி மாணவி உயிரிழப்பு

கல்லூரி மாணவி தற்கொலை
சாலை விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



