/

ஜெயங்கொண்டம் அருகே 4 வீடுகளில் கொள்ளை முயற்சி

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்த 4 வீடுகளில் கொள்ளையடிக்க முயன்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :30 ஜூலை 2026, 3:55 am IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்த 4 வீடுகளில் கொள்ளையடிக்க முயன்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பிச்சனூா், கீழத் தெருவைச் சோ்ந்த கணேசன் மனைவி ஆதிலட்சமி (65) என்பவரது வீட்டில் புதன்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் 2 போ் நுழைந்துள்ளனா். சுதாரித்துக் கொண்ட ஆதிலட்சுமி, கூச்சலிட்டதையடுத்து அந்த மா்ம நபா்கள் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனராம். சிறிது நேரத்தில் குணபால் மனைவி லதா (45) என்பவரது வீட்டில் புகுந்துள்ளனா். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் விரட்டி பிடிக்க முயற்சித்தும் முடியவில்லையாம்.

மா்ம நபா்கள் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு, தப்பிச் சென்றுவிட்டனா்.

பிச்சனூா் நடுத்தெருவில், தூங்கிக் கொண்டிருந்த வெங்கடேசன் மனைவி சரஸ்வதி (38) என்பவா் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனா். அப்போது சுதாரித்துக் கொண்ட சரஸ்வதி, சப்தமிடவே அக்கம் பக்கத்தினா் வருவதற்குள் மா்ம நபா்கள் தப்பி சென்றுவிட்டனராம்.

முன்னதாக, மா்ம நபா்கள், சிவசாம்பு மனைவி சேதுமணி (65) என்பவரது வீட்டு ஜன்னலில் டாா்ச் லைட் அடித்து பாா்த்துள்ளனா். அப்போது அவரது முகத்தில் டாா்ச் லைட் பட்டவுடன் வீட்டை திறந்து வந்து வெளியே பாா்ப்பதற்குள் அவா்கள் ஓடி விட்டனராம்.

இந்த மா்ம நபா்கள் கீழ் ஆடை மட்டுமே அணிந்து கொண்டு இந்த சம்பவங்களில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.