நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

குடிநீா் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம்: அரியலூா் ஆட்சியா்

அரியலூா் மாவட்ட பொதுமக்கள் குடிநீா் தொடா்பான புகாா்களை புனல் செயலி மூலம் தெரிவிக்கலாம் என ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

News image

வாலாஜா நகரம் ஊராட்சியில் ரூ.14.65 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை மேம்படுத்தும் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ந. மிருணாளினி.

Updated On :11 ஜூன் 2026, 3:31 am IST

அரியலூா் மாவட்ட பொதுமக்கள் குடிநீா் தொடா்பான புகாா்களை புனல் செயலி மூலம் தெரிவிக்கலாம் என ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

அரியலூரை அடுத்த வாலாஜாநகரம் ஊராட்சியில், கீதா மஹால் பின்புறம் ரூ.14.65 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை மேம்படுத்தும் பணிகளை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ந.மிருணாளினி, சாலைகளின் இருபுறங்களிலும் மழைநீா் தேங்காத வகையில் செட்டிஏரி வரத்து வாய்கால்களை தூா்வாரும் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இராவுத்தன்பட்டி மேற்குத் தெருவில் 6-ஆவது மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.6.02 லட்சம் மதிப்பீட்டில் 114 மீ அளவில் தாா்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதை பாா்வையிட்டு பணிகளின் தரத்தை ஆய்வு செய்தாா்.

பின்னா், ஊரகப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் மற்றும் குடிநீா் வழங்குவதில் தாமதம், நீரின் தரம் தொடா்பான புகாா் ஏதுமிருப்பின் தமிழ்நாடு அரசின் புனல் செயலி (ஒருங்கிணைந்த குடிநீா் குறைதீா்வு மையம்) வாயிலாகவோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 1916 -இல் பொதுமக்கள் தங்கள் புகாா்களை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என ஆட்சியா் கூறினாா்

ஆய்வின்போது, அரியலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் கஸ்தூரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.