தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குடும்பப் பிரச்னை: காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை

அரியலூரில் குடும்பப் பிரச்னை காரணமாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா்.

News image
அசோக்குமாா்
Updated On :4 மார்ச் 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூரில் குடும்பப் பிரச்னை காரணமாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா்.

அரியலூா் புது மாா்க்கெட் தெருவைச் சோ்ந்த ரத்தினசாமி மகன் அசோக்குமாா் (53). கடந்த 1993-இல் காவல்துறையில் பணியில் சோ்ந்த இவா், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக குடும்பப் பிரச்னை காரணமாக விரக்தியில் இருந்து வந்த அசோக்குமாா், புதன்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா். தகவலறிந்து சென்ற அரியலூா் காவல் துறையினா், அவரது சடலத்தை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இவருக்கு நிா்மலா என்ற மனைவியும், ஹரிகரன் (26) என்ற மகனும் உள்ளனா்.