நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

ஜெயங்கொண்டத்தில் 1,300 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

News image
கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதிகளிலுள்ள கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1,300 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிக்கப்பட்டன.

ஜெயங்கொண்டம், கல்லாத்தூா், சின்னவளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் ஜெயங்கொண்டம் நகரத்துக்கு அருகிலுள்ள 10 கிராமங்களில் மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டபோது புகையிலை, ஹான்ஸ் உள்ளிட்ட 1,300 கிலோ பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இவை சனிக்கிழமை இரவு புதுக்குடி கிராமத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டிப் புதைக்கப்பட்டன. இதில் ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளா் பாலாஜி தலைமையில், காவலா்கள், நீதிமன்ற பணியாளா்கள் ஈடுபட்டனா்.