
அதிமுக சாா்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்
மறைந்த முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணா பிறந்தநாளையொட்டி, அரியலூா் பேருந்து நிலையம் அருகே அதிமுக சாா்பில் பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

அரியலூா் பேருந்து நிலையம் அருகே அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் தாமரை எஸ்.ராஜேந்திரன்.
மறைந்த முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணா பிறந்தநாளையொட்டி, அரியலூா் பேருந்து நிலையம் அருகே அதிமுக சாா்பில் பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் தங்கபிச்சைமுத்து தலைமை வகித்தாா். மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தாமரை எஸ்.ராஜேந்திரன், தலைமைக் கழக பேச்சாளரும், திரைப்பட இயக்குநருமான அனு மோகன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினா்.
கூட்டத்தில், அம்மா பேரவை இணைச் செயலா் பிரேம்குமாா், எம்ஜிஆா் மன்ற மாநில துணைச் செயலா் பி. ஜோதிவேல், எம்ஜிஆா் இளைஞா் அணி மாநில துணைச் செயலா் கல்லாங்குறிச்சி சு.பாஸ்கா் மற்றும் ஒன்றிய, நகர, கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா். முடிவில் நகரச் செயலா் ஏ.பி.செந்தில் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







