தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அரசு கலைக் கல்லூரி மாணவர்கள்  233 பேருக்கு பணி நியமன ஆணை

கரூர் அரசு கலைக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வளாக நேர்காணலில் தேர்வான 233 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:43 am

DIN

கரூர் அரசு கலைக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வளாக நேர்காணலில் தேர்வான 233 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். 
கரூர், தாந்தோணி அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வளாக நேர்காணல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தேர்வான 233 பேருக்கு ஆட்சியர் த. அன்பழகன் தலைமையில்  பணி நியமன ஆணைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கிப் பேசியது: 
அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வளாக நேர்காணல் நடத்திட முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, கரூர் மற்றும் குளித்தலையில் உள்ள அரசு கல்லூரிகளைச் சேர்ந்த 512 மாணவ, மாணவிகள் பங்கேற்றதில், 233 மாணவ, மாணவிகள் பல்வேறு நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் தேர்வாகியுள்ளனர் என்றார்.  
நிகழ்ச்சியில், ஆட்சியர் பேசியது: 
வளாக நேர்காணல் நடத்திட  அமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன். அதன் விளைவாக அப்பல்லோ, ஐசன், பேங்சோன், எச்.பி. நிதி நிறுவனம், ஆர்.சி.எஸ்.எஸ், பஜாஜ், டெக்னோசாப்ட் யுரேகா, அம்டெக்ஸ் சிஸ்டம் உள்ளிட்ட 11 நிறுவனங்களில் இருந்து வந்து வளாக நேர்காணல் நடத்தி கரூர் மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு நல்லதொரு வாய்ப்பை வழங்கியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் நன்றி என்றார்.     
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் பாண்டியம்மாள், மாவட்ட தொழில்மைய மேலாளர் ரமேஷ், வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி, நேர்காணல் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகாந்த், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஏ.ஆர்.காளியப்பன், எஸ்.திருவிகா, வை.நெடுஞ்செழியன், கமலக்கண்ணன், மார்க்கண்டேயன், விசிகே.ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.