வேலாயுதம்பாளையம் அருகே நாவல் பழ வியாபாரியை பாட்டிலால் குத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் கிழக்கு தவுட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (60). நாவல் பழ வியாபாரி. இவர் அய்யம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சனிக்கிழமை மாலை பழம் விற்றபோது அங்கு வந்த தோட்டக்குறிச்சியை சேர்ந்த குட்டி(எ) கார்த்திகேயன் லட்சுமணனிடம் பழம் வாங்கியபோது அதற்கு பணம் கொடுப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன் அருகே கிடந்த பீர் பாட்டிலை உடைத்து லட்சுமணனின் தாடையில் குத்தினார். இதில் படுகாயமடைந்த லட்சுமணன் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து கார்த்திகேயனை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை

அம்புஜா சிமெண்ட்ஸ் முதல் காலாண்டு லாபம் 36% சரிவு!

ரயில் பயணிகளுக்கு... தத்கல் டிக்கெட் முன்பதிவில் ‘டோக்கன்’ முறை! எப்போது தெரியுமா?

தாமாகவே வருகைப் பதிவு செய்யும் பள்ளி மாணவர்கள்! ஆசிரியைக்கு குவியும் பாராட்டு!
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


