உயர்மின்கோபுர திட்டங்களை கேபிள்களாக மாற்றக்கோரி கரூரில் விவசாயிகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் எம்.ராஜாமணி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் வரவேற்றார். இதில், காங்கிரஸ் மாநில செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி, மாவட்ட காங். தலைவர் ஆர்.சின்னசாமி, தந்தை பெரியார் திக மாவட்டத் தலைவர் கு.கி.தனபால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய காங். கமிட்டி உறுப்பினர் பேங்க் கே.சுப்ரமணியன், பாமக மாநில துணைப்பொதுச் செயலாளர் பிஎம்கே. பாஸ்கரன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
இதில், தமிழ்நாடு கூட்டு இயக்கம் சார்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 11 உயர் மின்கோபுரங்கள் திட்டங்களை கேபிள்களாக மாற்ற வேண்டும். வரும் காலங்களில் உயர்மின் கோபுரங்கள் திட்டங்கள் அனைத்தையும் கேபிள்களாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






