பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

"அம்மாபட்டி, பெரியமஞ்சுவெளிக்கு ரூ.5.87 கோடியில் பணிகள்'

அம்மாபட்டி, பெரியமஞ்சுவெளி ஊராட்சிகளில் ரூ.5.87 கோடியில் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை தெரிவித்தார்.

Published On :

அம்மாபட்டி, பெரியமஞ்சுவெளி ஊராட்சிகளில் ரூ.5.87 கோடியில் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியம் அம்மாபட்டி ஊராட்சிக்குட்பட்ட கருங்கல்பட்டி, ஜமீன் ஆத்தூர் காலனி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் பெரிய மஞ்சுவளி ஊராட்சிக்குட்பட்ட கிரியப்ப நாயக்கனூர், நந்தால் நாயக்கனூர், கடம்பங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்ட அவர் மேலும் கூறியது:
ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசு மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் மக்களைத்தேடி கோரிக்கைகளை கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடிநீர், மின்விளக்கு தொடர்பாக மனுக்கள் வரப்பெறுகின்றன. அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு முறையாக அனுப்பப்பட்டு விரைவில் தீர்வு காணப்படுகிறது.
இதுவரை அம்மாபட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 129 பணிகள் ரூ.3.38 கோடி மதிப்பிலும், பெரியமஞ்சுவளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 107 பணிகள் ரூ.2.49 கோடி மதிப்பிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எஸ். கவிதா, வருவாய் கோட்டாட்சியர் கு. சரவணமூர்த்தி (கரூர்), வட்டார வளர்ச்சி அலுவலர் திருஞானம், பொறியாளர் கண்ணன், வட்டாட்சியர் பிரபு (அரவக்குறிச்சி), கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் ஏ.ஆர். காளியப்பன், கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.