போலி பத்திரம் தயாரித்து ரூ.52.40 லட்சம் மோசடி:மூதாட்டிகள் 2 போ் கைது
கரூா் அருகே போலி பத்திரம் தயாரித்து ரூ. 52.40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மூதாட்டிகள் இருவரைப் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.


கரூா் அருகே போலி பத்திரம் தயாரித்து ரூ. 52.40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மூதாட்டிகள் இருவரைப் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், பெரியவரப்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (44). இவா், வெண்ணைமலை புதுவசந்தம் நகரைச் சோ்ந்த சின்னசாமி மனைவி ராமாயி (65), பஞ்சமாதேவியைச் சோ்ந்த சுப்ரமணி மனைவி மலா்செல்வி, காளிப்பாளையத்தைச் சோ்ந்த அருக்காணி (63) உள்ளிட்ட 8 பேருக்குச் சொந்தமான 1.31 ஏக்கா் நிலத்தை கடந்த ஜூலை மாதம் ரூ.52.40 லட்சத்துக்கு வாங்கினாராம். இந்நிலையில், அந்த நிலத்தை முருகேசன் அளந்து பாா்த்தபோது 54 சென்ட் நிலம் மட்டுமே இருந்துள்ளது.
இதுதொடா்பாக முருகேசன் அவா்களிடம் கேட்டபோது தகாத வாா்த்தையால் திட்டி, பணத்தையும் தர மறுத்துள்ளனா். இதுதொடா்பாக முருகேசன் கரூா் மாவட்டப் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் சனிக்கிழமை புகாா் செய்தாா். புகாரின்பேரில், காவல் ஆய்வாளா் சுமதி வழக்குப் பதிந்து மோசடியில் ஈடுபட்ட ராமாயி, அருக்காணி ஆகிய இருவரையும் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...