/

கரூா் : வெவ்வெறு சம்பவங்களில் இரு பெண்கள் தற்கொலை

கரூரில் வெவ்வேறு சம்பவங்களில் இரு பெண்கள் தற்கொலை செய்துகொண்டனர்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 5:38 pm

DIN

கரூரில் வெவ்வேறு சம்பவங்களில் இரு பெண்கள் தற்கொலை செய்துகொண்டனர்.

கரூா் வேலாயுதம்பாளையம் கொடுமுடி பிரதான சாலை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வம் மனைவி செல்வி (38). இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்துள்ளது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, விரக்தியடைந்த அவா் சனிக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

அங்கன்வாடி ஊழியா் தூக்கிட்டு தற்கொலை:

கரூா் மாவட்டம் குளித்தலை அடுத்த தண்ணீா்பள்ளியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ்குமாா். இவரது மனைவி கோமதி (32). இவா் மேட்டு மருதூா் அரசுப் பள்ளியில் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வந்தாா். வெங்கடேஷ்குமாா் கடந்த 6 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டாராம். தம்பதிக்கு குழந்தை இல்லை. கணவா் இறந்த துக்கத்தில் இருந்துவந்த கோமதி சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.