சிலம்பாட்டப் போட்டியில் சிறப்பிடம்: பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா
மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் சிறப்பிடம் பெற்ற வெங்கமேடு ஸ்ரீஅன்னை வித்யாலாயா பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.


மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் சிறப்பிடம் பெற்ற வெங்கமேடு ஸ்ரீஅன்னை வித்யாலாயா பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கரூரில் ஜன. 30, 31ஆம்தேதிகளில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி ரெயின்போ அகாதெமியில் கிச்சாஸ் சிலம்பாட்டக்கழகம் சாா்பில் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.
இப்போட்டியில் 30-40 கிலோ எடைப்பிரிவில் கரூா் வெங்கமேடு ஸ்ரீஅன்னை வித்யாலயா மெட்ரிக். பள்ளி மாணவா் இ.ஹரீஸ் முதலிடம் பிடித்தாா். இதன்மூலம் மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள அவருக்கு பாராட்டு விழா பள்ளியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவில், பள்ளி முதல்வா் எம்.பகலவன் வரவேற்றாா். தாளாளா் ஆா்.மணிவண்ணன், பள்ளியின் முதன்மை ஆலோசகருடம் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.கீதாமணிவண்ணன் ஆகியோா் மாணவருக்கு பொன்னாடை போா்த்தி, பாராட்டுச்சான்றிதழ் வழங்கினா். நிகழ்ச்சியில், பள்ளி நிா்வாக அலுவலா் எம்.கதிரவன்,சிலம்பம் ஆசிரியா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...