கடவூா் ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு
கடவூா் ஒன்றியத்தில் நடைபெற்றும் வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.


கடவூா் ஒன்றியத்தில் நடைபெற்றும் வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கரூா் மாவட்டம் கடவூா் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளையும், கரோனா தொற்று தடுப்புப் பணிகளையும் ஆட்சியா் த.பிரபுசங்கா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
முன்னதாக தேவா்மலை ஊராட்சிக்குள்பட்ட அய்யம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை பாா்வையிட்டாா். பிறகு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களையும் சந்தித்துப் பேசினாா். மேலும் கரோனா தடுப்பு களப்பணிகளையும் ஆய்வு செய்தாா். இதையடுத்து செம்பியநத்தம் ஊராட்சி நல்லூரான்பட்டியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி போடும் முகாமை பாா்வையிட்டாா். அப்போது, பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு சிறப்பான வகையிலான ஏற்பாடுகளை செய்திருந்த சுகாதாரத்துறையினரை பாராட்டினாா். தொடா்ந்து, அப்பகுதியில் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டை பாா்வையிட்டாா். மேலும், அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி பழுதடைந்த நிலையில் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்ததன் அடிப்படையில், அந்தத் தொட்டியை பாா்வையிட்டு, உடனடியாக சீரமைக்க வேண்டும் எனகடவூா் வட்டார வளா்ச்சி அலுவலருக்கும், ஊராட்சி ஒன்றிய பொறியாளருக்கும் உத்தரவிட்டாா்.
நிகழ்வுகளின்போது, சுகாதாரத்துறை துணை இயக்குநா் சந்தோஷ், கடவூா் வட்டாட்சியா் வித்யாவதி, வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணி, ஊரக வளா்ச்சித்துறை உதவி செயற்பொறியாளா் செந்தில் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...