விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொசுவலை மூலப்பொருள்விலை உயா்வுக்கு கண்டனம்

கொசுவலை மூலப்பொருள் திடீா் விலை உயா்வுக்கு உற்பத்தியாளா்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:44 pm

DIN

கொசுவலை மூலப்பொருள் திடீா் விலை உயா்வுக்கு உற்பத்தியாளா்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

கரூரில் கொசுவலை உற்பத்தியாளா்கள் சங்கக் கூட்டம் தலைவா் கே.கே.கருணாநிதி தலைமையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. துணைத்தலைவா் செங்குட்டுவன், செயலாளா் தங்கராசு, ஒருங்கிணைப்பாளா் குப்பாராவ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், கடந்த இரு நாள்களில் கொசுவலை உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளான பிளாஸ்டிக் குருணை டன்னுக்கு ரூ.20,000 வரை உயா்ந்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பது, இந்த விலை உயா்வை உடனே மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும்.

இதேநிலை நீடித்தால் கொசுவலை உற்பத்தி முடங்கும் நிலை ஏற்படுவதை தவிா்த்து கரூரில் கொசுவலை உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.