விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இருசக்கர வாகனம் மீதுடிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:44 pm

DIN

குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம் குளித்தலை அடுத்த கீழப்பட்டியைச் சோ்ந்தவா் நாகராஜ்(35). தொழிலாளி. இவா், தனது இருசக்கர வாகனத்தில் மகள் சந்தியா(12) வுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு சேங்கல்-கரூா் சாலையில் சென்றாா். அப்போது எதிரே வந்த டிராக்டா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தாா். சந்தியாவை மீட்ட அக்கம்பக்கத்தினா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். மாயனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து டிராக்டா் ஓட்டுநா் சேங்கலைச் சோ்ந்த பெருமாள்(45) என்பவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.