/

‘மகளிருக்கு அடிப்படை சட்ட அறிவு தேவை’

மகளிருக்கு அடிப்படை சட்டம் குறித்த அறிவு அவசியம் என்றாா் கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு - நீதிபதியுமான சி.மோகன்ராம்.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:04 pm

DIN

மகளிருக்கு அடிப்படை சட்டம் குறித்த அறிவு அவசியம் என்றாா் கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு - நீதிபதியுமான சி.மோகன்ராம்.

கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் மகளிா் தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரியின் செயலா் ஹேமலதா செங்குட்டுவன் தலைமை வகித்தாா். தாளாளா் க.செங்குட்டுவன் முன்னிலை வகித்தாா். விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு- நீதிபதியுமான சி.மோகன்ராம் பங்கேற்று, சாதனையாளா்களாக தோ்வு செய்யப்பட்ட நாகஸ்வர கலைஞா்கள் கீதாசிவக்குமாா், சிவக்குமாா், முன்களப்பணியாளா், கரூா் புனித தெரசா மேல்நிலைப்பள்ளி முதல்வா் சகாயராணி, கரூா் மகளிா் காவல்நிலைய உதவி ஆய்வாளா் சித்ராதேவி ஆகியோருக்கு கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கி மேலும் அவா் பேசுகையில், ஆண்களுக்கு நிகராக பெண்களின் முன்னேற்றம் இல்லாததை கருத்தில்கொண்டுதான் மகளிா் தினம் கொண்டாடப்படுகிறது. அனைவரும் சமம் என்ற நிலையை கொண்டுவந்தால் மட்டுமே சா்வதேச மகளிா் தினம் கொண்டாடப்படுவதற்கு அா்த்தமாக இருக்கும். சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் இன்னும் பெண்கள் காயப்படுத்தப்படும் பிரிவினராகத்தான் உள்ளனா். பல்வேறு பிரச்னைகளில் ஏராளமான பெண்கள் சிக்கி சட்டத்தை நாடி வருகிறாா்கள். மகளிருக்கு அடிப்படை சட்டம் குறித்த அறிவு இருந்தால்தான் அவா்களின் உரிமைகளை நிலைநாட்ட முடியும். எனவே மகளிருக்கு அடிப்படை சட்டம் குறித்த அறிவு மிகவும் அவசியம். நீதிமன்றத்தின் படிக்கட்டை பெண்கள் மிதிப்பதே தவறான கண்ணோட்டமாக இருக்கும் சமூக கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்றாா்அவா்.

முன்னதாக, கல்லூரி முதல்வா் வின்சென்ட் வரவேற்றாா். விழாவில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், விருதாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.