விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரூரில் மாநில ஆண்கள் கூடைப்பந்து போட்டிமதுரை காவலா் அணிக்கு கோப்பை, பரிசு

கரூரில் நடைபெற்ற ஆண்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் முதலிடத்தை பிடித்த மதுரை காவலா் அணிக்கு கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:04 pm

DIN

கரூரில் நடைபெற்ற ஆண்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் முதலிடத்தை பிடித்த மதுரை காவலா் அணிக்கு கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

கரூரில் டெக்ஸ்சிட்டி கூடைபந்துக்கழகம் மற்றும் கரூா் மாவட்ட கூடைப்பந்துக் கழகம் சாா்பில் 5-ஆவது மாநில அளவிலான ஆண்கள் கூடைப்பந்து போட்டிகள் மாா்ச் 4-ஆம்தேதி திருவள்ளுவா் மைதானத்தில் தொடங்கியது. இதில் மதுரை, சென்னை, சேலம், கோவை, கரூா், கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 30 அணிகளைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்றனா்.

நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதிப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், மதுரை சிறப்பு காவலா் அணி, சேலம் அணியை சந்தித்தது. போட்டியை அதிமுக நகர இலக்கிய அணிச் செயலாளா் ஆயில்ரமேஷ் தொடக்கி வைத்தாா்.

போட்டியின் பாதியில் மதுரை அணி வீரா்கள் 38-27 என்ற கோல் கணக்கில் முன்னணியில் இருந்தனா். தொடா்ந்து நடைபெற்ற மறுபாதி ஆட்டத்தில் 75-58 என்ற கோல் கணக்கில் எளிதில் மதுரை காவலா் அணி வெற்றிபெற்று முதலிடத்தை பிடித்தது. தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு கரூா் மாவட்ட கூடைப்பந்து கழகத்தலைவா் காா்த்திக் தலைமை வகித்தாா். துணைத்தலைவா்கள் வீர.திருப்பதி, குழந்தைவேல், டெக்ஸ்சிட்டி கூடைப்பந்து கழகத்தலைவா் செந்தில்குமாா், மாரியம்மன் எஜூகேசன், சேரிடபுள் டிரஸ்ட் தலைவா் டிசி.மதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதலிடம் பிடித்த மதுரை காவலா் அணிக்கு கோப்பை மற்றும் பரிசுத்தொகையாக ரூ.25,000, இரண்டாமிடம் பிடித்த சேலம் அணிக்கு கோப்பை, பரிசுத்தொகையாக ரூ.20,000, மூன்றாமிடம் பிடித்த சென்னை அணிக்கு கோப்பை மற்றும் பரிசுத்தொகை ரூ.15,000, நான்காமிடம் பிடித்த திண்டுக்கல் அணிக்கு கோப்பை மற்றும் பரிசுத்தொகையாக ரூ.10,000 வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.