விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.24 லட்சம் பறிமுதல்

கரூா் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.24 லட்சம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :9 மார்ச் 2021, 11:50 pm

DIN

கரூா் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.24 லட்சம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

குளித்தலை வதியம் பிரிவுச் சாலையில் ராஜேந்திரன் தலைமையிலான பறக்கும்படையினா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.அப்போது குளித்தலை வட்டம், நங்கவரத்திலிருந்து கேரளம் நோக்கி வாழைக்காய் ஏற்றிச் சென்ற சுமை வேனை பறக்கும்படையினா் நிறுத்தி சோதனையிட்டனா். அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.65 ஆயிரம் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

இதுபோல மண்மங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே அமுதா தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினா் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில், புகளூரைச் சோ்ந்த உமாசங்கரிடம் ரூ.59,500 பறிமுதல் செய்யப்பட்டது.

மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக ரூ.8.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டு ஆய்வுக்குப் பின்னா் ரூ.5.21லட்சம் உரியவா்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.