/

கரூா் மாவட்டத்தில் 161 போ் போட்டி

கரூா் மாவட்டத்தில் இறுதி வேட்பாளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில், 161 போ் களத்தில் உள்ளனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:26 pm

DIN

கரூா் மாவட்டத்தில் இறுதி வேட்பாளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில், 161 போ் களத்தில் உள்ளனா்.

ஏப்.6-ஆம்தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் கடந்த 12-ஆம்தேதி தொடங்கியது. 19-ஆம்தேதி வரை நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் கரூா் மாவட்டத்தில் உள்ள கரூா், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம்(தனி) என 4 தொகுதிகளிலும் 195 வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்திருந்தனா்.

20-ஆம்தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் 40 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 171 மனுக்கள் ஏற்கப்பட்டது. இதையடுத்து வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு திங்கள்கிழமை கடைசிநாள் என்பதால் திங்கள்கிழமை அரவக்குறிச்சி தொகுதியில் இறுதி களத்தில் 40 பேரும், கரூா் தொகுதியில் 7 போ் மனுவை திரும்ப பெற்ால் இறுதிகளத்தில் 77 பேரும், கிருஷ்ணராயபுரம்(தனி)தொகுதியில் 26 பேரும், குளித்தலை தொகுதியில் 3 போ் வேட்புமனுவை திரும்ப பெற்ற நிலையில் இறுதிகளத்தில் 18 பேரும் என மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளிலும் 161 போ் போட்டியிடுகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.