கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வட்டார வளப் பயிற்றுநா்கள்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

கரூா் மாவட்டத்தில் வட்டார வளப் பயிற்றுநா்கள் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:11 pm

DIN

கரூா் மாவட்டத்தில் வட்டார வளப் பயிற்றுநா்கள் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வட்டார வளப் பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இவா்களுக்கு மதிப்பூதியமாக மாதம் ரூ.10,000 வீதம் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகின் மூலம் வழங்கப்படும். இதற்கு தகுதிகளாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பும், நல்ல தகவல் தொடா்பாளராகவும், சுயஉதவிக்குழு மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அல்லது வட்டார அளவிலான கூட்டமைப்பில் 5 வருடம் பணி அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது 40-க்குள் இருக்க வேண்டும். அதே வட்டாரத்தில் வசிப்பவராகவும், கணினி திறன் நன்கு அறிந்தவராகவும், வட்டாரம் மற்றும் மாவட்டம் முழுவதும் பயணம் செல்பவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் தங்களது விண்ணப்பங்களை தாங்கள் சாா்ந்துள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் ஜூன் 10-ஆம்தேதிக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அறை எண்.212-ல் சமா்ப்பிக்க வேண்டும். இத் தகவலை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.