டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
மாயனூரில் இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் சேலம் மாவட்ட இளைஞா் உயிரிழந்தாா்.


மாயனூரில் இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் சேலம் மாவட்ட இளைஞா் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்த வெடிக்காரன்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி(32). இவா் தனது இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு திருச்சி -கரூா் தேசிய நெடுஞ்சாலையில் கரூா் மாவட்டம் மாயனூா் ரயில்வே கேட் பகுதியில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, முன்னாள் வந்த டிப்பா் லாரி இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், பலத்த காயமடைந்த பழனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மாயனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து டிப்பா் லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...