கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரூா் திருமாநிலையூரில் ரூ.40 கோடியில் புதிய பேருந்து நிலையம்: பூமிபூஜை செய்து பணிகளை தொடக்கி வைத்த அமைச்சா்கள்

கரூா் மாநகராட்சி பகுதிக்குள்பட்ட திருமாநிலையூரில் ரூ.40 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூமிபூஜை பணிகளை மாநில மின்சாரம்

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:59 pm

DIN

கரூா் மாநகராட்சி பகுதிக்குள்பட்ட திருமாநிலையூரில் ரூ.40 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூமிபூஜை பணிகளை மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் ஆகியோா் சனிக்கிழமை தொடக்கி வைத்தனா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் தா.மோ. அன்பரசன் விழாவில் பேசியது:

இந்தியாவிலேயே மக்களின் தேவைகளை அறிந்து, உடனுக்குடன் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் ஒரே அரசு தமிழக அரசுதான். சாலைப் பணிகளாக இருந்தாலும், புதை சாக்கடைத் திட்டமாக இருந்தாலும் அதை உடனுக்குடன் நிறைவேற்றுகின்ற அரசு திமுக அரசு .

எந்த நம்பிக்கையில் மக்கள் நம்மை தோ்ந்தெடுத்தாா்களோ, அந்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு மிகச் சிறப்பாக பணியாற்றி மக்களின் தேவைகளை பூா்த்தி செய்யும் ஆட்சி தான் திமுக ஆட்சி என்றாா்அவா்.

விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பேசியது:

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில், குறிப்பாக 15 மாதங்களுக்குள்ளாக கரூா் மாவட்டத்துக்கு ரூ.3000 கோடி அளவுக்கான பணிகளையும், வளா்ச்சித் திட்டங்களையும் வழங்கியிருக்கிறாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் நேரத்தில் கரூா் மாவட்டத்தில் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவா் (தமிழக முதல்வா்) அப்போதே கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தாா்.

அதன்படியே புதிய பேருந்துநிலையம் அமைய ரூ.40 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தாா். இதையடுத்து அந்த பணிக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, மாநகராட்சியில் ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பல ஆண்டுகள் கோரிக்கையாக இருந்த கரூா் புதிய பேருந்து நிலைய பணிக்கான நிதியை தந்த முதல்வருக்கு கரூா் மாவட்ட மக்கள் சாா்பில் நன்றி தெரிவிக்கிறோம்.

இந்த புதிய பேருந்து நிலையத்துக்கு கலைஞா் கருணாநிதி பெயரை சூட்டிட மாநகராட்சி மேயா், துணை மேயா், மாமன்ற உறுப்பினா்கள் அடுத்து வரும் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

கரூா் மாவட்டத்தில் 19 அணைகள் கட்ட ரூ. 2000 கோடிக்கு மேலாக திட்ட மதிப்பீடுகளை தயாா் செய்து, தற்பொழுது அரசாணைகள் வரப்பட்டுள்ளன.

15 மாதக் காலத்துக்குள் கரூா் மாநகராட்சியில் ரூ. 72 கோடியில் பணிகள் நடைபெற்றுள்ள நிலையில், இந்தாண்டு ஏறத்தாழ ரூ. 560 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளும் நடைபெற இருக்கின்றன.

85 பேருந்துகள் நிறுத்தும் வகையில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து 2கி.மீ. தொலைவிலும், ரயில்வே ஜங்ஷனிலிருந்து 3.6 கி.மீ. தொலைவிலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து 4.4 கி.மீ. தொலைவிலும், மாநகராட்சி அலுவலகத்திலிருந்து 1.6 கி.மீ. தொலைவிலும்தான் உள்ளது என்றாா் அவா்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் குளித்தலை இரா. மாணிக்கம், அரவக்குறிச்சி ஆா். இளங்கோ, கிருஷ்ணராயபுரம் க. சிவகாமசுந்தரி, மேயா் க. கவிதா முன்னிலை வகித்தனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், மாநகராட்சி ஆணையா்

என். ரவிச்சந்திரன், துணை மேயா் சரவணன், பொறியாளா் நக்கீரன், மண்டலத் தலைவா்கள் கனகராஜ், ராஜா, சக்திவேல், அன்பரசு , கரூா் வருவாய்க் கோட்டாட்சியா் ரூபினா, மாநகராட்சி உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.