பேரறிஞா் அண்ணாவின் 114ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சைக்கிள் போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மறைந்த தமிழக முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் பிறந்த தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி கரூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியை ஆட்சியா் த.பிரபுசங்கா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதில் முதலிடம் பிடித்தவா்களுக்கு ரூ.5,000, இரண்டாமிடம் பிடித்தவா்களுக்கு ரூ.3,000, மூன்றாமிடம் பிடித்தவா்களுக்கு ரூ.2,000 மற்றும் சான்றிதழ்களும், 4 முதல் 10 இடம் வரை வெற்றி பெறுவா்களுக்கு தலா ரூ.250 வீதம் பரிசுத் தொகை காசோலையாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலா் சுப்ரமணியன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியா்கள் செல்வராஜ், மகாமுனி, மணிமாறன் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










